உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாகையில் போலீசார் முன்னிலையில் மோதல்

நாகையில் போலீசார் முன்னிலையில் மோதல்

நாகப்பட்டினம் : கையில், போலீசார் கண் எதிரிலேயே, இரு கோஷ்டிகளை சேர்ந்த வாலிபர்கள் மோதிக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.நாகப்பட்டினம் அருகே நாகூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடையில், சம்பா தோட்டத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் பி.வி.சி. , குழாய்களை வாங்கிக் கொண்டு பைக்கில் சென்றனர்.எதிரில் தெத்தி கிராமத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் வந்த பைக், சம்பா தோட்ட இளைஞர்கள் பைக்குடன் உரசியது.இதில் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்ய முயற்சித்தனர். அப்போது, இரு தரப்பும் போனில் ஆட்களை அழைக்க, பைக்கில் வந்த சிலர், போலீசார் முன்னிலையில் இரு தரப்பாக தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த சிலரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்