உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கனகன் ஏரி பகுதியில் துாய்மை பணி 2 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்

கனகன் ஏரி பகுதியில் துாய்மை பணி 2 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி சார்பில், கனகன் ஏரி பகுதியில் நடந்த துாய்மை பணியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட 2 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என, உழவர்கரை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி துாய்மை பணி செய்து வருகிறது. இந்நிலையில், வேர்ல்டு மிஷன் சொசைட்டி சர்ச் ஆப் காட் தொண்டு நிறுவனம் மற்றும் உழவர்கரை நகராட்சி இணைந்து, நேற்று கனகன் ஏரி பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.துாய்மை செய்யும் பணியை, கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ் துவக்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் சரவணன் உட்பட கனகன் ஏரி பாதுகாப்பு சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.மேலும், பிளாஸ்டிக் பையை பயன்படுத்த வேண்டாம், குப்பைகளை, குப்பை தொட்டியில் போட வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கனகன் ஏரி பகுதியில் துாய்மை செய்து, 2 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை