| ADDED : ஜூலை 18, 2024 11:11 PM
புதுச்சேரி: புனித சூசையப்பர் குளுனி மேல்நிலைப் பள்ளி யில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவிகள் தயாரித்த படைப்பாற்றல் பொருட்கள் இடம்பெற்றன.புதுச்சேரி புனித சூசையப்பர் குளுனி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சியை பேராசிரியர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ரோசிலி, துணை முதல்வர் பேன்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கண்காட்சியில், மாணவிகள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் கற்பனை வளத்தை வெளிப்படுத்தும் வகையில், தயாரித்த பொருட்கள் இடம் பெற்றன. மேலும், வாழ்விய லோடு ஒன்றிணைந்த ஐந்து வகை நிலங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.கணிதப்பாடத்தில் உள்ள முக்கோணவியல், நிகழ்தகவு ஆகியவற்றை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்பட்டது. மேலும், இயற்கையாக கிடைக்கும் ஆற்றலை கொண்டு மின்சாரம் தயாரிப்பது, மாம்பழங்களில் ரசாயண கலவை இருப்பதை கண்டுப்பிடிக்கும் கருவி, தேவையற்ற குப்பைகளை மறுசுழற்சி செய்து பேப்பர் தயாரிப்பது போன்ற பல்வேறு விதமான அறிவியல் பொருட்கள் மாணவிகள் தயார் செய்தவை கண்காட்சியில் இடம்பெற்றன.இந்த நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.