உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சோதனை சாவடிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

சோதனை சாவடிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு சோதனைச்சாவடிகளில் கலெக்டர் மணிகண்டன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் 10 சோதனைச்சாவடிகள் அமைத்து, தேர்தல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.விழிதியூர் சோதனைச் சாவடி மற்றும் அரசு பள்ளியில் அமைந்துள்ள ஓட்டுச் சாவடியில் பாகாப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் மணிகண்டன் திடீர் ஆய்வு செய்தார். மேலும், மதுபான கடைகள் சரியான நேரத்தில் மூடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.தமிழகம் மற்றும் காரைக்கால் எல்லையில் கவனமுடன் பணிபுரிய போலீசார் மற்றும் பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தினார்.மேலும் வாகன சோதனையின்போது, வீடியோ பதிவு செய்ய அறிவுருத்தினார். உடன் தேர்தல் துறை சிறப்பு அதிகாரி பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ