உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரி மாணவர் மாயம்

கல்லுாரி மாணவர் மாயம்

காரைக்கால்: காரைக்காலில் வேளாண் கல்லுாரியில் படித்த புதுச்சேரி மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, முத்தியால்பேட், சூரியகாந்தி நகரை சேர்ந்தவர் இளங்கோவன்; காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய துணை பேராசிரியர். இவரது மகன் தமிழ்குடிமகன், 19, மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தமிழ் குடிமகன் காரைக்கால் செருமாவிலங்கை பகுதியில் உள்ள பஜன்கோ வேளாண் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு, கல்லுாரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.கடந்த 24ம் தேதி முதல் தமிழ் குடிமகன் திடீரென கல்லுாரிக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுக்குறித்து அவரது தந்தையிடம் கல்லுாரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அவரது தந்தை இளங்கோவன் நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து தமிழ்குடிமகனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி