உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரி மாணவருக்கு கத்தி குத்து: வாலிபர் கைது

கல்லுாரி மாணவருக்கு கத்தி குத்து: வாலிபர் கைது

புதுச்சேரி : புதுச்சேரியில் முன் விரோதத்தால், கல்லுாரி மாணவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி, நாவற்குளத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன், 23. கல்லுாரி மாணவர். இவரது நண்பர், இடையன்சாவடியை சேர்ந்த பிரகதீஸ்வரன். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், இடையன்சாவடி சாலையில், இருவருக்கும் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த பிரகதீஸ்வரன் மறைத்து வைத்திருந்த கத்தியால், தமிழ்செல்வனை சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். இதில் பலத்த காயமடைந்த தமிழ் செல்வனை, அங்கிருந்த பொதுமக்கள் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் கோரிமேடு எஸ்.ஐ., ரமேஷ், கருவடிக்குப்பத்தில் பதுங்கி இருந்த பிரகதீஸ்வரனை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ