உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கனுாரில் குடிநீர் பந்தல் ஆணையர் திறந்து வைப்பு

திருக்கனுாரில் குடிநீர் பந்தல் ஆணையர் திறந்து வைப்பு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் திருக்கனுார் பஜார் வீதியில் குடிநீர் பந்தலை ஆணையர் எழில்ராஜன் திறந்து வைத்தார். புதுச்சேரி உள்ளாட்சி துறை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கோடை காலத்தில் பொதுமக்களின் தேவைக்காக குடிநீர் மற்றும் மோர் ஆகியவை கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பந்தல் அமைத்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, திருக்கனுார் பஜார் வீதியில் பெட்ரோல் பங்க் எதிரே நீர், மோர் பந்தல் ஆணையர் எழில்ராஜன் திறந்துவைத்து பொது மக்களுக்கு நீர், மோர், தர்பூசணி பழங்களை வழங்கினார். இதில், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன் உள்ளிட்ட ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஆணையர் எழில்ராஜன் கூறுகையில், 'மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குடிநீர் பந்தல் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், கொம்யூன் பஞ்சாயத்து உட்பட குடிநீர் தொட்டிகள் மற்றும் கொம்யூன் அலுவலகங்களில் பறவைகள் நீர் அருந்தும் வகையில் கிண்ணங்களில் குடிநீர் வைத்து, கோடை காலங்களில் பறவைகள் நீர் அருந்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ