உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பசுக்கள் இறப்பு இழப்பீடு; ரூ.25 ஆயிரமாக உயர்வு

பசுக்கள் இறப்பு இழப்பீடு; ரூ.25 ஆயிரமாக உயர்வு

புதுச்சேரி : பசுக்கள் இறந்ததற்கான இழப்பீட்டு தொகை 25 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.பட்ஜெட்டில் கால் நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலம் குறித்த முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்:தற்போதுள்ள கால்நடை கிளை அபிவிருத்தி நிலையங்களை சிறு கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. செயற்கை கருத்தரித்தல் திட்டத்தின் மூலம் 90 சதவீதம் உயர் மரபணு திறன் கொண்ட 1,000 பெண் கன்றுகளை உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் புதுச்சேரியில் மட்டும் தான் இத்திட்டமானது 100 சதவீத மானியத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதன் முறையாக 400 கால்நடை விவசாயிகளுக்கு தீவன உருண்டை செய்யும் இயந்திரம் 100 சதவீத மானியத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 10,000 'அசில்' கோழிக்குஞ்சுகள் தகுதியுள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.பால் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் பொருட்டு 50 சதவீத மானியத்தில் 1,000 விவசாயிகளுக்கு கறவை பசுக்கள் வழங்க உத்தேசித்துள்ளது. கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் கோழிகள், கூண்டுகள், தீவனங்கள் 7,500 ரூபாய் மதிப்பில் வழங்கப்படும். கிராமப்புற பெண்கள், மாணவர்களிடம் நல்ல வரவேற்பை கருத்தில் கொண்டு 17,000 வான்கோழிக் குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் இந்த நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது காப்பீடு செய்யப்படாத பசுக்கள் இறக்க நேரிட்டால் 6 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக கால்நடை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை இந்த நிதியாண்டில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த அரசு உத்தேசித்துள்ளது. கால்நடை துறைக்கு பட்ஜெட்டில் 76.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை