| ADDED : ஏப் 10, 2024 04:01 AM
பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில் இருந்து மூலக்குளம் வரை கேபிள் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.பொன்னுசாமி, ரெட்டியார்பாளையம். கற்களால் போக்குவரத்து பாதிப்பு
தட்டாஞ்சாவடி வி.ஐ.பி., நகர் மெயின் ரோட்டில் கற்களை கொட்டி வைத்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.பன்னீர்செல்வம்,தட்டாஞ்சாவடி. மரம் சாய்ந்துள்ளது
புதுச்சேரி லப்போர்த் வீதி, பாரதி வீதி சந்திக்கும் இடத்தில் சாலை குறுக்கே மரம் சாய்ந்துள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கவிதா, புதுச்சேரி. வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு
முத்திரையர்பாளையம் முதல் குறுக்கு தெரு, மாரியம்மன் கோவில் வீதியில் கழிவுநீர் செல்லும் பக்கவாட்டு வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டப்பட்டுள்ளது.மணி,முத்திரையர்பாளையம்.