உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலை

பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். புவனேஷ், புதுச்சேரி. காராமணிக்குப்பம் மாரியம்மன் நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. துர்கா, காராமணிக்குப்பம். தெரு நாய்கள் தொல்லை நெல்லித்தோப்பு அண்ணா நகரில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். தீபக், நெல்லித்தோப்பு. சுகாதாரசீர்கேடு காராமணிக்குப்பம், ஜீவானந்தம் பள்ளி வீதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஜெயராஜ், காராமணிக்குப்பம். வாய்க்காலில் குப்பை அடைப்பு நெல்லித்தோப்பு நடேசன் நகர், புவன்கரே வீதி, சிக்னல் எதிரே உள்ள வாய்க்காலில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி. சென்டர் மீடியனில் குப்பைகள் இந்திரா சிக்னலில் இருந்து கோரிமேடு செல்லும் சாலையில் மரங்களில் இருந்து விழும் சறுகுகள் சென்டர் மீடியனில் குவிந்து கிடக்கிறது. புவனேஷ், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை