உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

அரியாங்குப்பம்: கடலுார் சாலையில் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சப் கலெக்டர் போலீசில் புகார் அளித்தார்.புதுச்சேரியில் பகுதியில் அரசியல் உள்ளிட்ட பேனர்கள் வைக்கப்பட்டு வருவதால், வாகன விபத்து, போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. நகரப்பகுதியில் முக்கிய இடங்களில் வைக்கப்படும் பேனர்களை நகராட்சியினர் அகற்றி வந்தாலும், பேனர்கள் வைக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கடலுார் சாலை மரப்பாலம் முதல் நைனார்மண்டபம் வரை அரசியல் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. அதையடுத்து, நைனார்மண்டபம் பகுதியில் பேன்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் நேற்று முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை