| ADDED : மே 02, 2024 01:07 AM
புதுச்சேரி : புதுச்சேரி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனு திருஞானம் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.பொதுப்பணித்துறை மத்திய கோட்டம் செயற்பொறியாளர் சீனு திருஞானம் பணி நிறைவு பாராட்டு விழா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வளாகத்தில் நடந்தது. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமை தாங்கினார். கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன் மற்றும் பல்வேறு பிரிவு செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் செயற்பொறியாளர் திருஞானம் தலைமையில் நடந்த, வழுதாவூர் சாலை விரிவாக்கம், மேட்டுப்பாளையம் வாகன ஊர்த்தி முனையம், முருங்கப்பாக்கம் கைவினை கிராம கட்டடம், தாவரவியல் பூங்கா மேம்பாடு, திருக்காஞ்சி பாலம், வ.உ.சி. பள்ளி மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து சக பொறியாளர்கள் நினைவு கூர்ந்து பாராட்டினர்.