உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி, : புதுச்சேரி சட்டசபை செயலகத்தில் பணியாற்றிய ஊழியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி சட்டசபை பல்நோக்கு பணியாளர் முகமது ஆரிப். அவர், கடந்த 37 ஆண்டுகள் சட்டசபையில்பணியாற்றி நிறைவு பெற்றார். இதையடுத்து அவருக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில், சட்டசபை செயலகத்தின் செயலர் தயாளன் தலைமை தாங்கி, பாராட்டி பேசி, நினைவு பரிசு வழங்கினார். கண்காணிப்பாளர் முருகன், அவரின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.விவாதப்பதிவாளர் அலமேலு, கண்காணிப்பாளர்கள் முருகன், சுகுமாரன் மற்றும் செயலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ