உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிக்கலான இருதய ஆபரேஷன் புதுச்சேரி டாக்டர்கள் முத்திரை

சிக்கலான இருதய ஆபரேஷன் புதுச்சேரி டாக்டர்கள் முத்திரை

மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக புதுச்சேரியில் செய்யப்பட்டுள்ளது.இருதயத்தில் ஏற்படும் ஆபத்தான இருதய நோய்களில் ஒன்று மைட்ரல் ஸ்டினோசிஸ். இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இருதயத்தில் இருக்கும் மைட்ரல் வால்வு எனப்படும் இதழ்கள் இயல்பான நிலையில் திறக்கப்படாமல், அவற்றின் துவாரம் குறுகி விடும். இதனை கவனிக்காமல் விட்டால் ரத்தம் உறைந்து மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.இதற்கான சிக்கலான அறுவை சிகிச்சை, மணக்குள விநாயகர் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் தேவன், சீனிவாச ரெட்டி, முகுந்தன், ரஞ்சன், ராம்கி உள்ளிட்ட இதய சிகிச்சை நிபுணர்கள் குழுவின், சிக்கலான மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.டாக்டர்கள் கூறும்போது, 'சேலம் மாவட்டத்தை சேர்ந்த நோயாளி, சிக்கலான நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு உடனடியாக மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிக்கலான வால்வு அறுவை சிகிச்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். நோயாளி நலமாக உள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை