உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணினி வசூல் மையங்கள் இன்று, நாளை இயங்காது

கணினி வசூல் மையங்கள் இன்று, நாளை இயங்காது

புதுச்சேரி : புதுச்சேரியில் லோக்சபா தேர்தலால் கணினி வசூல் மையங்கள், இன்றும் நாளையும் இயங்காது என, மின்துறை இயக்குதல் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ் சன்யால் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மின்துறையின் அனைத்து கணினி வசூல் மையங்களும், லோக்சபா தேர்தல் பணிகளால், இன்றும், நாளையும் இயங்காது.ஆனாலும், மின் நுகர்வோர்கள், மின் கட்டண தொகையை, எப்போதும் போல, https://pedservices.py.gov.in, என்ற இணையதள முகவரி மூலம் செலுத்தலாம். பொதுமக்கள் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ