உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டுப் போட்டியில் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து

விளையாட்டுப் போட்டியில் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து

புதுச்சேரி : தேசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற புதுச்சேரி வீரர்கள் முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் சூப்பர் செவன் கிரிக்கெட் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 22ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தன.இதில், அனைத்து மாநில சூப்பர் செவன் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி சூப்பர் செவன் கிரிக்கெட் அசோசியேஷனை சார்ந்த 14 விளையாட்டு வீரர்கள், தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றனர்.இதையடுத்து, புதுச்சேரி திரும்பிய விளையாட்டு வீரர்கள் சூப்பர் செவன் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜான்அம்ப்ரோஸ், செயலாளர் எழில்ராஜன் மற்றும் மேலாளர் தேவேந்திரகுமார் ஆகியோர் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை