உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் கொம்யூனுக்கு செக் மண்டல அதிகார மையம் உருவாக்கம்

வில்லியனுார் கொம்யூனுக்கு செக் மண்டல அதிகார மையம் உருவாக்கம்

புதுச்சேரி, : வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்திற்கு மேலாக, மண்டல அதிகார மையம் உருவாக்கப்பட்டு ரிப்போர்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளன. இவை உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளாட்சித் துறையின் இயக்குனர் கீழ் வருகின்றனர். எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் உள்ளாட்சி துறையின் ஒப்புதலை கொம்யூன் பஞ்சாயத்துகள் பெற வேண்டும்.இந்நிலையில், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்திற்கு மட்டும் விதிவிலக்காக மண்டல அதிகார மையம் உருவாக்கப்பட்டு, அந்த மையத்தின் அதிகாரியிடம் ரிப்போர்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து மண்டல அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மண்டல அதிகார மையத்திற்கு ரிப்போர்ட் செய்வார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்ளாட்சி துறை துணை இயக்குனர் ரத்னா பிறப்பித்துள்ளார். வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து மேல் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சியினர் முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக, பிறப்பு சான்றிதழ், தனி அதிகாரி கையெழுத்து இல்லாமல் லே அவுட்களுக்கு ஒப்புதல் என, பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சரி செய்யவே, வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்திற்கு மேல் மண்டல அதிகார மையம் ஏற்படுத்தி, செக் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ