உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளஸ் 2 தேர்வில் முன்னேற்றம் கடலுார் சி.இ.ஓ., பெருமிதம் 

பிளஸ் 2 தேர்வில் முன்னேற்றம் கடலுார் சி.இ.ஓ., பெருமிதம் 

கடலுார் : ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு காரணமாக பிளஸ் 2 தேர்வில் கடலுார் மாவட்டம், மாநில அளவில் 22வது இடத்திற்கு முன்னேறியள்ளது என, முதன்மை கல்வி அலுவலர் பழனி கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கலெக்டர் அருண்தம்புராஜ் வழிகாட்டுதல் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பினால் கடலுார் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 22வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.மாவட்டத்தில் மொத்தமுள்ள 246 பள்ளிகளை சேர்ந்த 13,820 மாணவர்கள், 13,698 மாணவிகள் என, மொத்தம் 28,518 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 26,911 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 94.36. இது, கடந்த ஆண்டை விட 2.32 சதவீதம் கூடுதலாகும். அரசு பள்ளிகள் 12, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 2, தனியார் பள்ளிகள் 57 என, மொத்தம் 71 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வரும் கல்வியாண்டில் கடலுார் மாவட்டம் மாநில அளவில் 10வது இடத்திற்குள் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்