உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 6 கோவில்களில் திருடிய கடலுார் வாலிபர் கைது

6 கோவில்களில் திருடிய கடலுார் வாலிபர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் 6 கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை மற்றும் நகைகளை திருடிய கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி, உருளையன்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள உலகநாயகி அம்மன் கோவிலுக்குள் கடந்த 31ம் தேதி, புகுந்த மர்ம நபர், கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை மற்றும் 50 கிராம் அம்மன் நகைகளை திருடிச் சென்றார். புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கோவில்களில் தொடர் திருட்டு சம்பவம் நடந்தது.உருளையன்பேட்டை போலீசார் கோவிலில் பதிவான கைரேகை பதிவுகளை, கிரைம் ரெக்கார்டு பீரோ ஆய்வு செய்தனர். அதில், கோவில் உண்டியல் திருட்டில் ஈடுப்பட்டது கடலுார் கூத்தப்பாக்கம், முருகன்கோவில் தெருவைச் சேர்ந்த சுகுன்ராஜ், 26; என, கண்டுபிடிக்கப்பட்டது. கைரேகை பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தபோது, பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.நெல்லித்தோப்பு சிக்னல் அருந்ததி நகர் முத்தாலம்மன் கோவில், அய்யனார் நகரில் உள்ள முருகன் கோவில், பாகூரில் ஒரு கோவில், கடலுார் முதுநகரில் இரு கோவில் என 6 கோவில்களில் உண்டியல் உடைத்து திருடியது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் கிழக்கு கிரைம் போலீசார் சுகுன்ராஜ் இருக்கும் இடத்தை தேடினர். சேலத்தில் மறைந்திருந்திருந்த சுகுன்ராஜை போலீசார் பிடித்து புதுச்சேரி கொண்டு வந்தனர். அவரிடம் இருந்து, 50 கிராம் நகைகளை மீட்டனர்.அவரை, நீதிபதி முன் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக, சுகுன்ராஜ் கோவிலுக்குள் எப்படி நுழைந்து திருடினார் என்பதை போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை