உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.12.86 லட்சம் மோசடி  மர்ம நபர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் வலை

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.12.86 லட்சம் மோசடி  மர்ம நபர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் வலை

புதுச்சேரி: புதுச்சேரியில், 5 பேரிடம் 12.86 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி வில்லியனுார் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் போலியான வாட்ஸ் ஆப் குருப் ஆரம்பித்து, பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். அதை நம்பி அவர், ரூ.11.58 லட்சம் முதலீடு செய்தார். இதில் லாபத்தையும் எடுக்க முடியாமல் மர்ம நபரிடம் அவர் ஏமாந்தார்.மேலும், நெட்டப்பாக்கத்தை சேர்ந்த ஹேமச் சந்திரன். இவர் இணையதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி, ரூ.56 ஆயிரத்திற்கு லேப்டாப் ஆர்டர் செய்தார். பொருளை அனுப்பாமல் மர்ம நபர் ஏமாற்றினர்.அதே போல, வினோபா நகரை சேர்ந்தவர் பிரிசில்லா, என்பவரும், வீட்டு பொருட்கள் வாங்க 42 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். தொடர்ந்து, முதலியார்பேட்டையை சேர்ந்தவர் சையது சலீம், 13 ஆயிரம் ரூபாய், சாரம் பகுதியை சேர்ந்த ஜெயபிரியா, 17 ஆயிரம் ரூபாயை அனுப்பி மர்ம நபர்களிடம் ஏமாந்துள்ளனர்.இதுகுறித்து, 5 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை