பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமிக்கு, அக்னி நட்சத்திரத்தையொட்டி, நாளை முதல் தாராபிஷேகம் நடக்கிறது.பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திரத்தையொட்டி, நாளை (4ம் தேதி) காலை 9:25 மணிக்கு தாராபிேஷகம் துவங்குகிறது. இதனையொட்டி, நாளை 10.00 மணிக்கு, பால விநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.பகல் 12.00 மணிக்கு பன்னீர், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் மூலநாதருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. அக்னி நட்சத்திர நாட்கள் முழுதும் சுவாமியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரத்தில் நிரப்பப்பட்ட பன்னீர், ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், சிவலிங்கத்தின் மீது இடைவிடாது 24 மணி நேரமும், துளி துளியாக விழும் படியான தாராபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வரும் 25ம் தேதி வரை நடைபெறும் தாராபிஷேகத்திற்கு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் தர விரும்பும் பக்தர்கள், அளிக்கலாம் என, கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.