உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபருக்கு கொலை மிரட்டல் 

வாலிபருக்கு கொலை மிரட்டல் 

பாகூர்:முன்விரோத தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கன்னிக்கோவில் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் 36. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. கடந்த 12ம் தேதி முருகவேல் தனது நண்பர்கள் மூன்று பேருடன், நந்தகுமார் வீட்டிற்கு சென்று அவரை திட்டி,கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். புகாரின்பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, முருகவேல் மற்றும் அவரது கூட்டாளிகளைதேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை