| ADDED : மே 02, 2024 01:09 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் வயது முதிர்ச்சி காரணமாக இறந்த 90 வயது முதியவர் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.வில்லியனுார் வெள்ளாளர் வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 90. வயது முதிர்வு காரணமாக கடந்த 30ம் தேதி இறந்தார். வில்லியனுார் கலியமுருகன், இந்தியன் ரெட்கிராஸ் கிளை நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமன், அய்யனார், இறந்தவர் குடும்பத்தினரை சந்தித்து கண் தானம் அவசியம் குறித்து விளக்கினர்.குடும்ப உறுப்பினர் சம்மதத்துடன் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு கண் தானம் வழங்கப்பட்டது. இந்தியன் ரெட்கிராஸ் உறுப்பினர் ராமன் கூறுகையில், 'ஒருவர் இறந்த 6 மணி நேரத்திற்குள் கருவிழிகளை அகற்ற வேண்டும். எல்லா வயதினரும், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கண் கண்ணாடி அணிந்தவர்கள் கண் தானம் செய்யலாம். கருவிழி அகற்றிய பின் முகத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது. கண் தானம் பெறப்படும் கருவிழிகள் விற்கப்பட மாட்டாது. கண் தானம் வழங்க முன் வருவோர், இந்தியன் ரெட் கிராஸ்க்கு தகவல் தெரிவித்தால், பயிற்சி பெற்ற டாக்டர்கள் வீட்டிற்கு வந்து கருவிழி அகற்றி செல்வர். டாக்டர் லட்சுமிபதி 98423 33660, அய்யனார் 9566360813 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என, கூறினார்.