அதிக விளைச்சல் தரும் விதைகள் மானியத்தில் வழங்க முடிவு
வேளாண் துறை முக்கிய அறிவிப்புகள்;புதுச்சேரி தொலைநோக்கு பார்வைகள்-2047 என்ற செயல் திட்டத்தின் கீழ் புதுச்சேரியை ஒரு முழுமையான உயிர் வேளாண்மை மாநிலமாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இயற்கை விவசாயத்திற்கான தேசிய இயக்க திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நெற்பயிர் மட்டுமே சாகுபடி செய்யக்கூடிய நிலத்தில், மண் வளத்திற்கு ஏற்ப பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறு தானிய பயிறு வகைகளையும் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கப்படும். அதற்காக பயிர் பல்வகைப்படுத்தல் திட்டத்தின் கீழ் உயர் ரக அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகள், பொது பிரிவு விவசாயிகள் 75 சதவித மானியத்திலும், அட்டவணை இன விவசாயிகளுக்கு 90 சதவித மானியத்திலும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விளைவிக்கும் பயறு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் பொருட்டு மத்திய அரசின் பி.எம்.,-ஆஷா திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும்.