மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
4 hour(s) ago
பாகூர்: போலீஸ் ஆம்புலன்ஸ் இல்லாததால், முள்ளோடையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபரின் பிரேதத்தை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது. புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடை சந்திப்பு நுழைவு வாயில் பகுதியில் உள்ள புல் தரையில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்தார்.இது குறித்து, பொது மக்கள், கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ரோந்து போலீசார், பிரேதத்தை பார்வையிட்டு, தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரம் ஆகியும் போலீஸ் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரவில்லை. அந்த ஆம்புலன்ஸ் சுதந்திர தின விழா தொடர்பான பணிக்கு சென்று விட்டதால், உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்த செய்தி சமூக வலைதளத்தில் பரவியது. இதையடுத்து, கிருமாம்பாக்கம் போலீசார், அங்குள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து இறந்தவரின் பிரேதத்தை, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago