உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிறந்து 5 நாளில் இறந்த குழந்தையின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக ஜிப்மருக்கு வழங்கல்

பிறந்து 5 நாளில் இறந்த குழந்தையின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக ஜிப்மருக்கு வழங்கல்

தம்பதிக்கு ரெட் கிராஸ் பாராட்டுபுதுச்சேரி: தொற்று பாதிப்பால் பிறந்து 5 நாளில் இறந்த குழந்தை உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஜிப்மருக்கு தானமாக வழங்கிய தம்பதியை ரெட்கிராஸ் சொசைட்டி பாராட்டியது.திருக்கனுார், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கவிபிரியா. இரண்டாவது கர்ப்பமான கவிபிரியாவிற்கு கடந்த மாதம் 21ம் தேதி ஜிப்மரில் சுக பிரசவத்தில் 2.8 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்த அடுத்த நாளே காய்ச்சல் அதிகரித்தது. 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தையின் ரத்த மாதிரிகள் பரிசோதித்தபோது, தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் சிகிச்சை பலனின்றி கடந்த 25ம் தேதி குழந்தை இறந்தது.குழந்தை இறந்த தகவல் அறிந்து மணிகண்டன், கவிப்பிரியா தம்பதி அழுது புரண்டனர். பின், குடும்பத்தாரின் அனுமதியுடன் இறந்த குழந்தையின் உடலை மருத்துவ ஆராய்ச்சிகாக ஜிப்மருக்கு தானமாக வழங்கினர்.இறந்த குழந்தை உடலை தானமாக வழங்கி தம்பதியின் சேவையை அறிந்த இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை, திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தம்பதி மணிகண்டன், கவிபிரியாவை வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டியது. நிகழ்ச்சியில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி, டாக்டர் சக்திதரன், ரெட் கிரஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார், பொருளாளர் பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை