உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராணுவ வீரரின் வாரிசுகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு கோரிக்கை

ராணுவ வீரரின் வாரிசுகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்க தலைவர் மோகன், முதல்வர் ரங்கசாமியிடம் அளித்த மனு;புதுச்சேரியில் தகுதி வாய்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் அனைவருக்கும் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். புதுச்சேரி மருத்துவக் கல்லுாரிகளில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள, 1 சதவீத இட ஒதுக்கீட்டை, 3 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும்.குரூப்- சி,யில் இருந்து, 'பி'க்கு மாற்றப்பட்ட பணியிடங்களுக்கு தற்போது இட ஒதுக்கீடு இல்லை. மாற்றப்பட்ட பணியிடங்களுக்கு முன்பு இருந்தது போல, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கடந்த, 2021ம் ஆண்டு, எங்கள் சங்கத்தின் சார்பாக நடந்த, '1971 இந்தோ- பாகிஸ்தான் போர்' வெற்றியின் பொன் விழா நிகழ்ச்சியின் போது, இந்த கோரிக்கைகளை உங்களிடம் சமர்ப்பித்தோம். நீங்களும் இது குறித்து கவனிப்பதாக உறுதி அளித்தீர்கள்.புதுச்சேரி அரசின் முப்படை நல வாரிய இயக்குனர், இது சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை. முன்னாள் ராணுவ வீரர்கள் சமுதாய மக்களுக்கு வரும், 26ம் தேதி நடக்கும் கார்கில் போர் வெற்றியின் வெள்ளி விழா பரிசாக, மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Hariddavij77
ஜன 26, 2025 21:02

Despite their tireless service to our country day and night, no action has been taken by the Puducherry government to provide a 3% reservation in MBBS admissions for the children of ex-servicemen. If this reservation is not granted, it raises a fundamental question: What is the purpose of the entire reservation tem? If the government cannot prioritize the wards of our ex-servicemen, then why have reservations at all? It is imperative that the Puducherry government takes immediate action to address this issue.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ