உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைப்பட்டா வழங்க கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மனைப்பட்டா வழங்க கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மனைப்பட்ட வழங்க வலியுறுத்தி பாகூர் மா. கம்யூ., சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பாகூர் இந்திய கம்யூ., மார்க்., சார்பில், பாகூர் கொம்யூன் பகுதியில் உள்ள மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, பேரணியாக வந்து, கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். மாநில குழு உறுப்பினர் கலியன், இளவரசி, பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில், பாகூர், மணப்பட்டு, அரங்கனுார் பகுதியில் உள்ள தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். கரையாம்புத்துாரில் பிற்படுத்தப்பட்ட 61 குடும்பங்களுக்கு பட்டா கொடுத்த இடத்தை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை