மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
சுகாதாரத் துறை இயக்குனர் வேண்டுகோள்புதுச்சேரி: டெங்கு கொசுக்களை உருவாக்கும் பொருள்களை சமூக பொறுப்போடு அகற்ற வேண்டும் என, புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.மே 16ம் தேதி தேசிய டெங்கு தினத்தையொட்டி, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:டெங்கு ஏடீஸ் கொசுவால் பரவும் வைரஸ். ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை சுத்தமான நீர் தேக்கத்தில் கொசு இனப்பெருக்கம் செய்கிறது. இது மழைக்கால நோயாகும். மழையின் போது டெங்கு காய்ச்சல், சாதாரணமாக காய்ச்சல் அறிகுறிகளுடன் தானாகவே சரியாகிவிடும். அடுத்த நிலையில் தலைவலி கண்களுக்கு பின்தாங்க முடியாத அளவில் வலி, மூட்டுகளை முறிக்கும் அளவிலான வலி ஆகியவை இருக்கும்.மூன்றாவதாக டெங்கு காய்ச்சல் உருவாக்கும் வைரஸ் கிருமி, ரத்த கசிவு உருவாக்குவதற்கு காரணமாகிறது. கடைசியாக உடலில் தண்ணீர் சத்து குறைவு காரணமாக ரத்த நாடி மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது. இந்த கடைசி இரண்டு வகை பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.டெங்கு காய்ச்சல் விட்ட பிறகு நன்றாகிவிட்டது என்ற பொய்யான தோற்றத்தை உண்டாக்கி, பாதிப்புகளை உடலில் ஒருவர் உணராத வகையில் உருவாக்கி, காலதாமத சிகிச்சையால் உயிர்பலி ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உருவாக்கும் ஏடீஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும். அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்வோர் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.மேலும் கொசு வலைகள், கொசு விரட்டி, மூலிகை கொசு விரட்டிகள் பயன்படுத்துவது சிறந்த வழி. டெங்கு கொசுக்களை உருவாக்கும் பொருள்களை சமூக பொறுப்போடு அகற்றி டெங்கு இல்லாத புதுச்சேரியை உருவாக்குவோம்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago