உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சர்க்கரை நோய் பாதித்தவர் துாக்கிட்டு தற்கொலை

சர்க்கரை நோய் பாதித்தவர் துாக்கிட்டு தற்கொலை

பாகூர்: சர்க்கரை நோய் பாதித்தவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கன்னியகோவில் அடுத்த உச்சிமேடு பொறையாத்தம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குமார், 49. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்து வந்தது.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சர்க்கரை அதிகமாகி, அவரது வலது காலை வெட்டி எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனால் மனமுடைந்த குமார் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் குகன் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை