உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கரையாம்புத்துார் கோவிலில் தீமிதி திருவிழா

கரையாம்புத்துார் கோவிலில் தீமிதி திருவிழா

நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் திரவு பதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த கரையாம்புத்துார் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.கடந்த 13ம் தேதி இரவு அர்ஜூனன் - திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது. 14ம் தேதி அம்மன் முத்துப்பல்லக்கு உற்சவம், நேற்று முன்தினம் பூங்கரகம் வீதியுலா நடந்தது. நேற்று மாலை தீமிதி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு உள்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை