உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நல்லாத்துார் கோவிலில் தீமிதி திருவிழா

நல்லாத்துார் கோவிலில் தீமிதி திருவிழா

நெட்டப்பாக்கம்: நல்லாத்துார் திரவுபதிஅம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுக்கினர்.நெட்டப்பாக்கம் அடுத்த தமிழக பகுதியான நல்லாத்துார் கிராமத்தில் உள்ள திரவுபதிஅம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 5ம் தேதி முதல் துவங்கி, நடந்து வந்தது. அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது.கடந்த 8ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை பூங்கரகத்துடன் தீமிதி திருவிழா நடந்தது. ஏரளமான பக்தர்கள் தீமித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.ஏற்பாடுகளை நல்லாத்துார் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை