உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.எஸ்.பாளையத்தில் தீமிதி உற்சவம்

பி.எஸ்.பாளையத்தில் தீமிதி உற்சவம்

திருக்கனுார் : பி.எஸ்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருக்கனுார் அடுத்த பி.எஸ்.பாளையம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்மற்றும் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.தொடர்ந்து, படுகளம் நிகழ்ச்சி மற்றும் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், தீபராதனை நடந்தது.முக்கிய நிகழ்வாக, மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை