உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மீது கார் மோதியதில் மாற்றுத்திறனாளி படுகாயம்

பைக் மீது கார் மோதியதில் மாற்றுத்திறனாளி படுகாயம்

பாகூர்: பைக் மீது கார் மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்துள்ள பூரணாங்குப்பம் பொன்னம்பலம் நகரை சேர்ந்தவர் மாதேஷ் 45; மாற்றுத்திறனாளியான இவர் நோனாங்குப்பம் மேம்பாலத்தின் அருகே இளநீர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு, மாதலட்சுமி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு மாதேஷ் தனது நான்கு சக்கர பைக்கில், சொந்த வேலையாக அரியாங்குப்பம் நோக்கி சென்றார்.நோனாங்குப்பம் பாலத்தின் அருகே சென்ற போது, அவ்வழியாக சென்ற சுசூகி கார், அவரது பைக் மீது மோதியது. இதில், சாலையில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை பொது மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரின், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை