உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசு பஸ்சில் மது கடத்தல் கண்டக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை

புதுச்சேரி அரசு பஸ்சில் மது கடத்தல் கண்டக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை

புதுச்சேரி, : புதுச்சேரியில் இருந்து சென்னை சென்ற பி.ஆர்.டி.சி., பஸ்சில் மதுபானம் கடத்திய பஸ் கண்டக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை 5:30 மணிக்கு பி.ஆர்.டி.சி., பஸ் (பி.ஒய்.01.டி.பி. 9758) புறப்பட்டது. பஸ்சில் சந்தேகத்திடமாக 4 பெட்டிகள் ஏற்றப்பட்டது. இது குறித்து பஸ் பயணிகள் பி.ஆர்.டி.சி., நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.பஸ் காலை 6:00 மணிக்கு, கோரிமேடு அருகே பஸ் சென்றபோது, பின்னால் வந்த பி.ஆர்.டி.சி., நிர்வாக ஊழியர்கள் பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அப்போது, 4 பெட்டிகளில் 750 மி.லி., அளவுள்ள 40 மதுபானங்கள் தமிழக பகுதிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. விசாரணையில், பஸ் கண்டக்டரான வழுதாவூரைச் சேர்ந்த அருள், 40; என்பவர் மதுபானங்களை சென்னைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மதுபானங்களை பறிமுதல் செய்த பி.ஆர்.டி.சி., நிர்வாகம் பஸ் கண்டக்டர் அருளை பஸ்சில் இருந்து இறக்கி, வேறு கண்டக்டர் மூலம் பஸ்சை அனுப்பி வைத்தனர்.பிடிப்பட்ட மதுபானங்கள் பி.ஆர்.டி.சி., அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. மதுபானம் கடத்திய கணடக்டர் அருள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.தமிழகத்திற்கு இயக்கப்படும் பி.ஆர்.டி.சி., பஸ்களில் இதற்கு முன்பு பல முறை மதுபான கடத்தல் நடந்தது. அதனை பி.ஆர்.டி.சி., நிர்வாகம் பிடித்தது. அந்த மதுபானங்கள் கலால் துறையில் ஒப்படைக்கவில்லை.அதுபோல், இந்த முறையும் தமிழகத்திற்கு கடத்திய மதுபானங்களை பி.ஆர்.டி.சி., நிர்வாகம் பறிமுதல் செய்து அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கண்டக்டர் அருள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ