உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு தினமலர் நாளிதழின் 'பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில், 'தினமலர்' நாளிதழின், மாணவர்களுக்கான 'பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.பள்ளி ஆசிரியர் ஜான் பெந்தகோஸ்த் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை அனிதா தலைமை தாங்கினார். புதுச்சேரி முத்தமிழ் மன்ற நிறுவுநர் செந்தில் குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'தினமலர் - பட்டம்' இதழை, மாணவர்களுக்கு வழங்கினார்.மேலும், அவர் 'பட்டம்' இதழின் சிறப்புகளையும், மாணவர்களின் பன்முக ஆற்றலை வளர்க்க துணை புரிவது குறித்தும் விளக்கினார்.ஆசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.இதில், ஆசிரியர் - ஆசிரியைகளான சாந்தி, ஷீலா விநாயக், பிரபாகரன், வள்ளி, முரளிதரன், பானுமதி, ரூபா, திலகம், கலைவாணி மற்றும், 100,க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி