உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 4 பேர் ஊருக்குள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை

4 பேர் ஊருக்குள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் 4 பேர் 2 மாதம் ஊருக்குள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.லோக்சபா தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் உலா வரும் குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் மீது போலீசார் தடை உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.அதன்படி, முதலியார்பேட்டை பகுதியில் 4 பேர் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலியார்பேட்டை அனிதா நகர், 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்த வேலு (எ) தாடி வேலு, 38; வண்ணாங்குளம், அய்யப்பசாமி நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார், 35; அனிதா நகர், வைகை வீதியைச் சேர்ந்த சரவணன் (எ) கருப்பு சரவணன், 31; தேங்காய்த்திட்டு, ஜீவ ஓளி கோவில் வீதியைச் சேர்ந்த மணி (எ) மணிகண்டன், 19, ஆகிய நால்வரும் 2 மாதங்கள் ஊருக்கு நுழைய புதுச்சேரி வடக்கு மாவட்ட சப் கலெக்டர் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை