உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாங்கனி திருவிழா பாதுகாப்பு குறித்து மாவட்ட எஸ்.பி.,ஆய்வு

மாங்கனி திருவிழா பாதுகாப்பு குறித்து மாவட்ட எஸ்.பி.,ஆய்வு

காரைக்கால் : காரைக்காலில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து மாவட்ட எஸ்.பி., நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.காரைக்கால் மாவட்டத்தில் 63 நாயன்மார்க ளின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் அம்மையாரின் கணவனிடம் சிவபெருமான் மாங்கனி கொடுத்து அனுப்பி. அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும்.இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும். அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கையால் நடந்து செல்வதையும் சித்தரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது.இதில் ஆயிரக்கணக் கில் பத்தர்கள் கூடுவார்கள என்பதால் பாதுகாப்பு குறித்து மாவட்ட எஸ்.பி.,கள் சுப்ரமணியன், பாலச்சந்தர் தலைமையில் போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விழா ஏற்பாடுகள் குறித்து கோவில் தனி அதிகாரி காளிதாசன் காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கினர்.உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் வாகனங்ளை நிறுத்துவது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெளியில் செல்லுவதற்கு பாது காப்பு ஏற்பாடுகள் 60க்கு மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் வைப்பது. 300க்கு மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில ஈடுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.மேலும் 4 இடங்களில், உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப் பது. நான்கு இடத்தில் எல்.இ.டி., திரைகள், போக்குவரத்து நேரிசலை தடுக்க மாற்று வழியில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை, உள்ளிட்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஆய்வில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, புருேஷத்தமன், பிரவீன், பால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை