உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புவன்கரே வீதியில் வடிகால் பணி; தற்காலிக போக்குவரத்து மாற்றம்

புவன்கரே வீதியில் வடிகால் பணி; தற்காலிக போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி : புவன்கரே வீதியில், வடிகால் பணிக்காக இன்று முதல் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி வடக்கு கிழக்கு போக்குவரத்து எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு:புதுச்சேரி, புவன்கரே தெருவில், இன்று 3ம் தேதி முதல் சாலையின் குறுக்கே அய்யனார் கோவில் தெரு அருகில், பொதுப்பணித்துறையினரால், 'யு' வடிகால் அமைக்கப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இதை முன்னிட்டு, இன்று முதல் புவன்கரே வீதியில், அனைத்து வாகனங்களுக்கான, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி முதலியார்பேட்டை எம்.ஏ சண்முகம் சாலையில் இருந்து, புவன்கரே வீதி வழியாக, நெல்லித்தோப்பு நோக்கி செல்லும் வாகனங்கள், வடிகால் பணி நடக்கும் இடத்தினை, அடைந்து, வலது புறம் திரும்பி, பிராமினாள் வீதி வழியாக, பாண்டி - கடலுார் சாலை செல்லவும். மேலும், இடதுபுறம் திரும்பி, அன்னை சிவகாமி பள்ளி சாலை வழியாக, 100 அடி சாலையில் செல்ல வேண்டும்.அதேபோன்று, நெல்லித்தோப்பு சந்திப்பில் இருந்து, புவன்கரே வீதி வழியாக, மரப்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள், வடிகால் பணி நடக்கும் இடத்தினை அடைந்து, இடது புறம் திரும்பி ஆலை வீதி வழியாக, பாண்டி - கடலுார் சாலையை அடையவும். மேலும், வலதுபுறம் திரும்பி, அனிதா நகர் சாலை வழியாக, 100 அடி சாலையில் செல்ல வேண்டும்.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், முதலியார்பேட்டை ஆலை தெரு, பிராமினாள் வீதி, அனிதா நகர் சாலை மற்றும் அன்னை சிவகாமி அரசு பள்ளி ஆகிய சாலைகளில், வாகன ஓட்டிகள் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்தாமல், போக்குவரத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ