உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர், சாலை மேம்பாட்டு திட்டங்கள்: முதல்வர் ஆலோசனை

குடிநீர், சாலை மேம்பாட்டு திட்டங்கள்: முதல்வர் ஆலோசனை

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து, வங்கி தலைவர் மனோஜ் சர்மா உள்ளிட்டோர், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாடினர்.புதுச்சேரி மாநிலத்தில், பொதுப்பணித்துறை உள்கட்டமைப்பு, குடிநீர் ஆதார விரிவாக்கம், பாதாள சாக்கடை திட்டங்கள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பை நவீன மயமாக்கல், முக்கிய சாலை மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.அதுமட்டுமின்றி இந்திராகாந்தி சிலை சதுக்கத்தில் இருந்து ராஜிவ்காந்தி சிலை சதுக்கம் வரை மேம்பாலங்கள் கட்டுதல், மரப்பாலம் சந்திப்பில் இருந்து, அரியாங்குப்பம் பாலம் வரை மேம்பாலம் கட்டுதல், மரப்பாலம் முதல் முள்ளோடை வரை, 4 வழிப்பாதையாக, விரிவாக்கம் செய்தல். உப்பனாறு கால்வாய் மற்றும் பெரிய வாய்க்காலை துாய்மைப்படுத்துதல் போன்ற பல பணிகள், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் நீண்ட கால கடனாக பெற்று செயல்படுத்தப்பட உள்ளன.அதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் மனோஜ் சர்மா, உள்கட்டமைப்பு நிபுணர் பாவேஷ், போக்குவரத்து நிபுணர் ஜாவித், ஆகியோர் நேற்று, புதுச்சேரி சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாடினர்.இந்த நிகழ்வில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் சுந்தரமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். அதற்கு முன்னதாக, கள ஆய்வையும் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை