உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம் மடுகரை ராமமூர்த்தி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் தேவசேனா தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சுதந்திரம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன், மடுகரை புறக்காவல் நிலைய சப் இன்ஸ்பெக்ர் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா, ஹான்ஸ், சிகரெட்டுகள் போன்றவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விற்பவர்கள் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். மேலும் பள்ளி, கல்லூரி அருகில் மாணவர்களுக்கு தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், போலீசார், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். ஆசிரியை வேலாயிலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி