உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டி தற்கொலை போலீசார் விசாரணை

மூதாட்டி தற்கொலை போலீசார் விசாரணை

பாகூர்: கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவில், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் இந்திரா, 66. இவரது கணவர் மணி கடந்த ஒரு வாரத்திற்கு முன், சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனால், இந்திரா விரக்தியில் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் புடவையால் துாக்குப் போட்டு இந்திரா தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை