உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்

தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்

புதுச்சேரி, : தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு புதுச்சேரி மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; புதுச்சேரியில் கடந்த 19ம் தேதி ஓட்டுப் பதிவு நடந்து முடிந்துவிட்டது. ஆனால் தொடர்ந்து தேர்தல் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மற்றும் வணிர்களிடம் செயல்படுத்துவது தேவையற்றது.ஓட்டுப்பதிவு தேர்தல் முடிவு வர இன்னும் 40 நாட்கள் உள்ளது. இந்த கால கட்டத்தில் தேர்தல் துறையின் கட்டுப்பாடுகளால் பொதுமக்கள், வணிகர்கள் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.முகூர்த்த தினங்கள் வரும் காலமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமின்றி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள இந்த கட்டுப்பாடுகள் நிறைய சிரமங்களை கொடுக்கிறது.கொரோனாவுக்கு பிறகு புதுச்சேரி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த புதுச்சேரியில் இறுதி கட்ட தேர்தல் முடிந்து முடிவுகள் வரும் வரை தேர்தல் நடத்தை விதிகள் செயல்படுத்துவது அவசியமில்லாத ஒன்று. எனவே, மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தளர்த்தி பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு தடையின்றி வணிகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த எந்தவித தடையும் இல்லாத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ