| ADDED : ஜூன் 08, 2024 04:42 AM
புதுச்சேரி : சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள கெடு விதிக்கப்பட்டுள்ளது.உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு கூட்டம் நடந்தது. அதில், உழவர்கரை நகராட்சியில் சாலையோர வியாபாரத்தை ஒழுங்குப்படுத்த முடிய செய்யப்பட்டது. அதற்கான தனிக்குழு அமைக்கப்பட்டது. சாலையோர பகுதியில் வியாபாரம் செய்பவர்களை கண்காணித்து, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் இடத்திற்கு மாற்றம் செய்வதை இக்குழு வியாபாரிகளிடம் அறிவுறுத்தும்.அதில், வழுதாவூர் சாலை, திண்டிவனம் சாலை, கடற்கரை சாலை, விழுப்புரம் சாலை பகுதியில் வியாபாரம் செய்பவர்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் இடத்திற்கு ஏழு நாட்களுக்குள் மாற்றம் செய்ய வேண்டும். சாலையோர பகுதியில் ஆக்கிரமிப்புகளை செய்துள்ள நிறுவனங்கள் அகற்றம் செய்து கொள்ள வேண்டும்.இல்லை எனில் ஒரு நாளைக்கு 250 ரூபாய் அபராதம் விதித்து, உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.