உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமணம் நிச்சயித்த இளம்பெண் தற்கொலை

திருமணம் நிச்சயித்த இளம்பெண் தற்கொலை

வில்லியனுார்: வில்லியனுார் அருகே திருமண நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.வில்லியனுார் அடுத்த வி.தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் முரளி மகள் ஜனனி, 19. இவருக்கு கடந்த மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் செய்தனர். மாப்பிள்ளையிடம் மொபைல் போனில் ஜனனி பேசிவந்தார். திடீர் என இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது.மனமுடைந்த ஜனனி கடந்த 23ம் தேதி காலை எலிபேஸ்ட் சாப்பிட்டார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி