உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் ராணுவ வீரர் நெஞ்சு வலியால் சாவு

முன்னாள் ராணுவ வீரர் நெஞ்சு வலியால் சாவு

அரியாங்குப்பம்: நெஞ்சு வலி ஏற்பட்டு முன்னாள் ராணுவ வீரர் இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், குலதீப மங்கலம், ரகோத்தமன் நகரை சேர்ந்தவர் ஏழுமலை, 47; முன்னாள் ராணுவ வீரர். தற்போது, தனியார் வங்கி ஒன்றில் செக்யூரிட்டியாக பணி செய்து வந்தார். இவரது மகனுக்கு கண் பரிசோதனை செய்ய தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு நேற்று வந்தார்.தவளக்குப்பம் சந்திப்பில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு, மருத்துவமனைக்கு வந்தார். நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் அவரை ஜிப்மருக்கு கொண்டு சென்றனர்.டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை