உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளங்கோ அடிகள் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஆலோசனை

இளங்கோ அடிகள் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஆலோசனை

புதுச்சேரி: முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேனிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி சங்கம் ஏற்படுத்த உள்ளனர்.இதற்கான பணிகளை, இளங்கோ அடிகள் அரசு பள்ளியில் கல்வி பயின்று அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணி புரியும் இயற்பியல் விரிவுரையாளர் ஸ்ரீராம், நுண்கலை ஆசிரியர் இளமுருகன் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவரும் பள்ளியின் இயற்பியல் விரிவுரையாளர் ஸ்ரீராம் பேசுகையில், 'பழம் பெருமை வாய்ந்த இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உலகெங்கும் உள்ளனர். பலர் நல்ல நிலையில், அரசின் உயர் பதவிகளிலும், விஞ்ஞானிகளாகவும் உள்ளனர்.புதுச்சேரி முதல்வர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது இப்பள்ளியின் சிறப்பு. பள்ளி மாணவர்களின் தரமான கல்விக்கும், விளையாட்டிற்கும், பள்ளி முன்னெடுத்துவரும் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்க அரசின் பதிவு பெற்ற முன்னாள் மாணவர்களின் சங்கம் தேவை' என்றார். ஆலோசனை கூட்டத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர்களான முத்தரையர்பாளையம் செங்கழுநீரம்மன் ஆலய நிர்வாக குழு தலைவர் ராதாகிருஷ்ணன், செம்படுகை நன்னீரக தலைவர் ராமமூர்த்தி, பாண்டியன், ரவி மற்றும் ராகவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.முன்னாள் மாணவர்களின் சங்கத்துக்கு விரைந்து நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும் சங்கத்திற்கு அரசின் பதிவு பெறவும் உரிய வழிவகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளி நுண்கலை ஆசிரியர் இளமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை