| ADDED : ஏப் 06, 2024 05:39 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் கலால் துறை தாசில்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.புதுச்சேரியில் லோக்சபா தேர்தலையொட்டி, போலீஸ் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கலால் துறை தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று சேதாரப்பட்டு, கோரிமேடு, இ.சி.ஆர்., பகுதிகளில் உள்ள பார்களில் ஆய்வு செய்தனர். அப்போது பார்களில் இருந்து எடுக்கப்படும் சரக்குளின் மொத்த விபரம், அதில் விற்பனை செய்யப்பட்ட சரக்குகள், மீதமுள்ள சரக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். ஒரு நபருக்கு எவ்வளவு சரக்குகள் விற்கப்படுகிறது என தகவல்களை சேகரித்தனர். பின், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி சரக்கு விற்பனை செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்து சென்றனர்.