| ADDED : ஜூலை 14, 2024 05:58 AM
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை வரவேற்று புதுச்சேரி அலையான்ஸ் பிரான்ஸ்சில் விளையாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன.பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் வரும் 26ம் தேதி துவங்கி ஆக., 11ம் தேதி வரை 33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடக்கிறது.பாரிசில் 35 இடங்களில், 32 விளையாட்டுக்கள், 329 பிரிவுகளில் நடக்க உள்ளது. இதில் 155 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.ஒலிம்பிக் போட்டியை காண பல்வேறு நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக உலகம் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களை பிரான்ஸ்சிற்கு ஈர்க்கும் விதத்தில் புதுச்சேரி பிரெஞ்ச் துணை துாதரகம், லிசே பிரான்ஸ்சிஸ் கல்வி வளாகத்தில் வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையான்ஸ் பிரான்ஸ்சில் உள்ள மினி தியேட்டரில் மூன்று நாட்கள் ஒலிம்பிக் பிலிம்ஸ் என்ற தலைப்பில் ஹோம் கேம்ஸ் டாக்குமென்ட்ரி மற்றும் டெம்பீட், மேரி நெட் ஆகிய திரைப்படங்கள் மாணவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்காக திரையிடப்படுகிறது.மேலும் அந்த வளாகத்தில் டேபிளில் விளையாடும் பேபி கால்பந்தாட்டம், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் மாணவர்கள் விளையாடுவதற்கு அமைக்கப்பட்டு வருகிறது.