உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாட்டுப்புற கலை விழா

நாட்டுப்புற கலை விழா

புதுச்சேரி: புதுச்சேரி கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில், நாட்டுப்புற கலை விழா பூராணங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்ரிய குருகுலத்தில் நடந்தது.சங்க பொதுச் செயலாளர் ஜோதிசெந்தில் கண்ணன் தலைமை தாங்கினார். கலைமாமணி விஜயகுமார், அமைப்பு செயலர் மோகன், சங்க செயற்குழு உறுப்பினர்கள் அன்பழகன், ராஜராம், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிறுவனர் தமிழ்வாணன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பளராக சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு சிலம்பம், மல்யுத்தம், குஸ்தி, பம்பை, உடுக்கை, காளியாட்டம், பொய்க்கால் ஆட்டம், பறை, ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடி ஆட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட 80 நாட்டுப்புற கலைப் பிரிவின் கலைஞர்களுக்கு கலை ரத்னா விருது வழங்கி கவுரவித்தார்.சங்க பொருளாளர் சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்கினார். காலைமாமணி குமரன், பழனி ஆகியோர் நோக்கவுரையாற்றினர்.விழாவில் நாட்புறப் கலைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்கசெயலர் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை